இலங்கை மலையகத்திலிருந்து ஆடுமாடுகள் போல விரட்டப்பட்ட தமிழர்களின் கதை. ஶ்ரீமாவோ சாஸ்த்ரி ஒப்பந்தம் அடிப்படையில் பல லட்சம் தமிழர்கள் தேயிலை தோட்டத்திலிருந்து பிடுங்கி எறியப்பட்ட சோகக் கதை. நடுவிலே கொஞ்சம் கடல் கர்வம், அதிகார போதை, பதவித் திமிர், வறட்டுப் பிடிவாதம் போன்ற வினோத குணங்கள் ஆண்டான் அடிமை காலத்தில் மனித சமூகத்தில்தான் ஒரு நிதானத்துக்கு வந்து முறைப்படுத்தப் பட்டிருக்கும் என்று தோன்றுகிறது. அதன் பிறகு பல உற்பத்தி உறவு முறைகள் மாறி இன்றும் மனிதனை சுவாரஸ்யப்படுத்திக் கொண்டிருப்பது காமத்துக்கு அடுத்தபடியாக அதிகார போதைதான். உழைப்பவர்கள் ஒரு பகுதியாகவும் அதிகாரம் செய்பவர் இன்னொரு பகுதியாகவும் இருந்ததற்கு சுமார் நான்காய
தமிழ்மகன் (பிறப்பு: டிசம்பர் 24, 1964) தமிழ் எழுத்தாளர் ஆவார். இவரது இயற்பெயர் வெங்கடேசன். வளவன், தேனீ ஆகியவை பிற புனைப் பெயர்கள் ஆகும். இதுவரை ஏராளமான சிறுகதைகள், கட்டுரைகள், சில நாவல்கள் எழுதியுள்ளார். அறிவியல், சமூக சிறுகதைகளை சுவாரசியமான நடையில் எழுதி வருகிறார். திரைப்படம் தொடர்பான கட்டுரைகள், திரைப்படங்களுக்கு உரையாடல்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய மானுடப் பண்ணை எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 1994 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதினம் வகைப்பாட்டிலும் “எட்டாயிரம் தலைமுறை” எனும் நூல் 2008 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சிறுகதை வகைப்பாட்டிலும் பரிசு பெற்றிருக்கின்றன.
Excellent Novel, want to know about srilankan migrated tamils and their story in the tea/coffee estates. he has that flow which cariies you nicely throughout the story.