காதல் இல்லாமல் போகலாம், ஆனால் அது ஏற்படுத்திய காயமும், அதனால் உண்டான தழும்பும் அவனை விட்டு நீங்காதே! இன்றிலிருந்து சரியாக ஒன்பது மாதங்களுக்கு முன்பு ஒரு மாலை நேரம், அவனை பிரிந்திருக்கும் ஏக்கம் மனதை வாட்ட, அவனோடு அவள் இருந்த இனிமையான நிமிடங்களின் அடையாளமாக இருக்கும் அந்த கடற்கரைக்கு வந்திருந்தவளின் அலறல் சத்தம் மட்டுமே அந்த கடற்கரை ஓரம் அமைந்திருந்த வீட்டில் எதிரொலித்தது...... இந்த மனித இனம் மட்டுமே தன் இச்சைக்கு தன் இனம், தன் உறவு, தன் உயிர் என்ற உணர்வு சிறிதுமில்லாமல் வேட்டையாட துடிக்கும்.