குண்டலகேசி அறிமுகம் நகுண்டலம் + கேசி - குண்டலகேசி என்றாகும். குண்டலகேசி பெண்பாற்பெயர். குண்டலம் காதணி. கேசி - கூந்தல், பழங்காலத்தில் சுருண்ட வடிவமுடையதை குண்டலமாக காதில் அணிந்தனர். இந்த பெண்ணின் தலைமயிர் சுருண்ட வடிவத்தில் அமைந்திருக்கலாம். அதனால், குண்டலகேசி என்ற பெயரைப் பெற்றிருக்கலாம் இந்நூல் பற்றிய செய்தியை தொல்காப்பியர் உரை, யாப்பருங்கல விருத்தியுரை, வீரசோழிய உரை, நீலகேசி, சிவஞான சித்தியாவிர்த்தி ஞானபிரகாச எழுதிய உரை இவற்றிலிருந்து குண்டலகேசி பாடல்கள் கிடைக்கின்றன. ஐந்து சிறுகாப்பியங்கள் ஒன்றான நீலகேசி என்னும் சமணநூல் குண்டலகேசிக்கு மறுப்பாக எழுதியுள்ளதாகக் கூறுவர். குண்டலகேசி பெளத்த சமயத்தைச் சார்ந்த நூல்.