கந்த சஷ்டி கவசம் என்பது திரு தேவராய சுவாமிகளால் முருகப் பெருமான் மீது இயற்றப்பட்ட பாடலாகும். 'காக்க' என இறைவனை வேண்டிக்கொள்ளும் பாடல்களைக் கவசம் என்பர். அவற்றில் இந்நூல் பெரிதும் அறியப்படுவது ஆகும்.
இதில் எழுத்து மந்திர உச்சாடணங்கள் உள்ளன.கவசத்தின் ஒவ்வோர் அடியும் கந்தசுவாமியின் திருக்கையிலுள்ள வேலைப் போன்றது. உடல், உள்ளம், உயிர் அனைத்துக்கும் வேலே கவசமாக உள்ளது. கந்தர் சஷ்டி கவசம் மந்திர மறை நூல் என்பது, பாராயணம் செய்து பலன் அடைந்தவர்களது அனுபவ உண்மையாகும்.
‘சரவணபவ’ எனும் திருநாமம் இந்த கந்தர்சஷ்டி கவசத்தின் மூல மந்திரமாகும். இந்நூலின் முதல், இடை, கடை (1, 16, 162, 237) பகுதிகளில் இந்த மூலமந்திரத்தை&