கவிதைகளுடன் கனவுகள்காதல்! நேரம் காலம் என எதையும் அறியாத ஒன்று. அழகு, அறிவு, பணம் இதற்கெல்லாம் அப்பாற்பட்டது தானே உண்மை காதல்?சட்டென ஒரு நொடியில் மனதில் பல மாயங்களை தோற்றுவிக்கும் வல்லமை இந்த காதலுக்கு கை வந்த கலை தான். அதற்கு பெரிதாய் எந்த காரணங்களும் காரியங்களும் தேவையிருப்பதே இல்லை. ஏன் வந்தாய்? எதற்கு வந்தாய்?, எப்படி வந்தாய்? இந்த கேள்விகள் அர்த்தமற்று போகும் இடமும் கூட காதலே!வீண் சண்டை என ஒருவர் கூறுவதில் பல நியாங்களைக் கொண்டிருக்கும் நம் காதல். அய்யோ என பதறும் பல பிரச்சினைகளை அழகாய் சிறு தூசாய் கையாண்டிருக்கும் நம் காதல்.இதோ காரணத்தோடு இவளை விரும்பிடும் ஒருவன். அந்த காரணத்தாலேயே குழம்பி நிற்கும் இவள்.