வேட்டைப் பறவையொன்றாகத் தன்னை வரித்துக்கொள்ளும் ஒருத்தன், தற்செயலை விரட்டிப் பிடிக்கத் துணிகிற பயணமே இந்நாவல். எல்லாவற்றையும் எழுதும் கரமாகத் தன்னை உணரும் அவன், இறுதியில் எதை அடைந்தான்? மலையுச்சியில் விடாமல் சுற்றும் தர்மசக்கரத்தை சுழல விடுவது யார்? அச்சக்கரத்தை விரட்டிப் பிடிக்க முயலும் இளைஞன் ஒருத்தனின் பார்வையில் விரியும் இந்நாவல் இதுவரை சொல்லப்படாத களமொன்றைக் கட்டியெழுப்பியிருக்கிறது. வண்ணமயமான சித்திரங்களின் வழியாக அதிர்ஷ்டமென்பது குறித்து ஆழமான கேள்வி எழுப்புகிறது. சூதின் உச்சியைப் பார்க்கப் புறப்பட்ட அவனது பயணம் எந்தக் கூட்டில் நிறைவடைந்தது? புதிய சாளரத்தைத் திறந்து காட்டி இருக்கிறார் சரவணன் சந்திரன்.
ஒரு ஆறுமாத இடைவெளிக்கு பின் முழுமையாக வாசித்து முடித்த புத்தகம். சரவணன் எழுத்துகளில் இருக்கும் அதே விறுவிறுப்பு இன்நாவலிலும் இருக்கிறது.ஒருவன் நம்மிடம் அவன் ரகசியங்களையும் அவன் அறிந்து வைத்திருக்கும் நண்பர்கள் அவன் திட்டங்கள் என அனைத்தும் சொல்வது போலயே எழுதுவது எனக்கு படிப்பதற்கு இன்னும் விருப்பம் அதிகம் கூட்டி விடுகிறது. தலைப்பு பொருந்த எழுதுவது தனி சிறப்பு . ஒரே குறையாக படுவது அனைத்து கதைகளும் ஒரே பாணியில் இருப்பதாக படுவது.
"இசைக்கு சும்மா இருப்பவனின் மனதை மயக்கத்தான் சக்தி இருக்கிறது. பறந்து கொண்டிருக்கிற மனதிற்கு அது வெறும் இனிமையான சத்தம் மட்டுமே"