விழியில் மலர்ந்து, உணர்வில் கரைந்து, உயிரில் கலந்து நிலைப்பது தான் காதல். அவ்வளவு சுலபமாக ஒருவரிடத்தில் நுழைந்து விடாது காதல். அதை புரிந்து கொள்ளாமல், காதல் என்பது கடையில் வாங்கும் கத்தரிக்காய் போன்றது... யாருக்கு வேண்டுமானாலும் காதல் வரும்...யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்...காதலிக்க வைத்து விடலாம்… சண்டை சச்சரவு இல்லாத, மனம் ஒத்த, ஈருடல் ஓருயிராய் வாழும் இல்லற வாழ்க்கை காதல் திருமணத்தில் தான் கிடைக்கும் என்ற புரிதலுடன், காதலித்து மணக்க வேண்டும் என்ற கொள்கையுடன் வளர்கிறாள் நம் கதையின் நாயகி. தன் வாழ்வில் சந்தித்த சில கசப்பான சம்பவங்களால், காதல் என்றாலே எட்டிக்காயை சாப்பிட்டவனை போல முகத்தை சுளித்து, பின்னங்கால் பிடரியில் பட தலைதெரித்து ஓடு