பேசாப் பொருளைப் பேசத் துணிவதும், புதிய மொழியில் சொல்ல முனைவதுமே கவிஞர் இசையின் தனித்துவம். அதே கல்யாணகுணங்களைப் பேணியுள்ள அவரது உரைநடையும் பிறிதொன்றைக் காண்பதில் பிழையொன்றுமில்லாத புதுமையைக் கொண்டவை. பாரதியின் கவிதைகளில் சத்தியத்தைக் காணும் அதே கண்கள்தான் குத்துப்பாட்டுகளோடு ஆட்டமும் போடுகிறது. தமிழ்க் கவிதைகளைப் பற்றி அக்கறையுடன் பேசும் அதே சொற்கள்தான் வடிவேலுவின் வசனங்களையும் மணியன்பிள்ளையின் சாகசங்களையும் சிறப்பித்துப் பேசுகின்றன. பொதுப்புத்தியி லிருந்து விலகி தனக்கான ஒற்றையடிப் பாதையில் முதலடி வைக்கும் பித்துமனத்தின் தத்தளிப்புகளே இக்கட்டுரைகளுக்கு உரமேற்றியுள்ளன. இசையின் மொழிதலில் முந்திக்கொண்டு நிற்கி
1977ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டம் இருகூரில் ஆறுமுகம் - நாகரத்தினம் தம்பதியருக்கு மகனாக பிறந்த இசை 2002 ஆம் ஆண்டில் தமிழ்ச் சூழலில் கவிஞராக அறிமுகம் ஆகினார். இவரது இயற்பெயர் ‘சத்தியமூர்த்தி’ என்பதாகும். இவர் தற்போது தமிழ்நாடு பொதுச் சுகாதாரத்துறை, அரசு மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணியாற்றி வருகிறார். மேலும் இவரும் இவரது நண்பர்களும் இணைந்து ‘கருக்கல்’ எனும் சிறுபத்திரிகை ஒன்றை நடத்தி வருகின்றனர். அது ஆனந்த விகடனின் சிறந்த சிறுபத்திரிகைக்கான விருதினைப் பெற்றுள்ளது. மேலும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, அந்திமழை, தடம், தீராநதி முதலிய இலக்கிய இதழ்களில் கவிதைகள் மற்றும் திறனாய்வு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வருகிறார். 2014ஆம் ஆண்டில் “இளம் படைப்பாளருக்கான சுந்தரராமசாமி விருது” பெற்றுள்ளார்.