மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள் நம் கதையின் நாயகி...எப்பொழுதும் தேனி போன்ற சுறுசுறுப்பும், துறுதுறுப்பும், கூடவே கொஞ்சமாய் அசட்டுதுணிச்சலும் மிக்கவள். காலத்தின் கணக்கால் பட்டாம்பூச்சியாய் சுற்றி திரியும் தருணத்தில் குடும்பத்தின் பொறுப்பை சுமக்க வேண்டிய சூழ்நிலை. அதையும் இன்முகத்துடனே சுமக்க தயாராகிறாள் அந்த பட்டாம்பூச்சி. . கூடவே அவளுடைய அசட்டு தைர்யத்தில் யோசிக்காமல் அவள் செய்யும் ஒரு செயல் அவள் வாழ்க்கையையே புரட்டி போட இருக்கிறது. அவளுக்கு பல இன்னல்களை கொண்டு வந்து சேர்க்க போகிறது. அந்த இன்னல்களை எல்லாம் சமாளித்து வெளிவருவாளா? அவள் வாழ்க்கையில் மீண்டும் பட்டாம்பூச்சியாய் வலம் வருவாளா? தெரிந்து கொள்ள இந்த கதையை படியுங்கள்..!.