வெட்டவெளியின் விகாரமே பொருள்களும் விசைகளும். ஆகாயவெளி நசுங்கும், விரியும், வளையும்.ஒன்றுக்குள் ஒன்றாக, நீரில் கரைந்த உப்பு போல பல ஆகாயவெளிகள் ஒரே மகா ஆகாயத்திற்குள் உள்ளன.ஒவ்வோர் ஆகாயவெளிக்கும் தனித்தனி அணுத்துகள்களும், ஆற்றல்களும் உள்ளன. அனைத்தும் ஒரே அடிப்படை விதிகளுக்குள் இயங்குகின்றன.புராணங்கள் சொல்லும் ஏழு உலகங்களும் இருக்க வாய்ப்பு இருக்கிறது.ஆகாயம் பற்றிய அற்புத அறிவியல் பயணம்.