நட்பு- உலகில் அன்னையின் அன்புக்குப்பின் உன்னதமாகப் போற்றப்படுவது நல்லதொரு நண்பன்/நண்பி காட்டும் தூய்மையான அன்புதான். காதலுக்கு இணையானது... அதையும் விடவே மேலானது.நட்பு என்றாலே பொதுவாக பெண்களின் நட்புதான் கண் முன்னே நிற்கும். ஆனால் காலங்காலமாய் ஆண்களின் நட்புதான் பெரிதாக போற்றபட்டு வந்திருக்கின்றன.நட்பு என்றதும் கண் முன்னே வருவது தமிழ் புராணங்களில் காட்டப்பட்ட துரியோதனன்-கர்ணன் நட்பு, கண்ணன்-குசேலன் நட்பு. அதோடு நிஜ வாழ்க்கையிலும் பெரிதாக போற்றப்பட்ட கார்ல் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் நட்பு, கோப்பெருஞ்சோழன்-பிசிராந்தையார் நட்பு... இப்படி இன்னும் எத்தனையோ பேர்களை வரிசைபடுத்தலாம்.இன்றைய தலைமுறையிலும், அன்றாடம் பழகும் சமுதாயத்திலும் இவர்களை