ஒரு பெரிய தவறு செய்துவிட்ட ஒரு மனிதன், அத் தவறை தவறாக ஏற்றுக்கொள்ளவே பல வருஷங்கள் பிடிக்கலாம் என்று, நமக்குத் தெரிந்த பலருடைய வாழ்க் கையைப் பார்க்கும்போது நாம் அறிந்துகொள்ளுகிறோம். சமூகத்தில் இன்றுள்ள நிலையில், தவறு செய்யாமல் பொருளாதார ரீதியில் முன்னேறவும் முடியாது. நாண யம், நேர்மை, கற்பு, உண்மை என்று எல்லாம் கதை கதையாகக் கதைத்தாலும் கூட இன்றைய அளவு கோல்கள் படி முன்னேற்றமடைபவன் அப்படி ஒன்றும் பழம்பெரும் குணங்களைப் பின்பற்றுபவனாக இருந்து தன் லக்ஷ்யத்தை எட்டிவிட முடியாது என்பது வெளிப் படை. பொருளாதார யுகம் - அதற்குக் கலியுகம் என்று பௌராணிகர்கள் பெயர் வைத்திருந்தார்கள் - திரேதா யுகத்தின், கிருதயுகத்தின், சத்யயுகத்தின் அடிப்படை களில் இயங்க மறுக்
க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.