RSS அமைப்பை பற்றிய ஒரு விரிவான அலசல் இந்நூல்.
அமைப்பின் தொடக்கம், கொள்கை (?!), செயல்பாடுகள் என அனைத்தையும் ஆதாரங்களுடன் விளக்கியுள்ளார் விடுதலை இராசேந்திரன் அவர்கள்.
நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய கருத்துக்கள், நாம் கவனிக்க தவறிய கருத்துக்கள் இந்நூலில் பல இருக்கின்றன.
எனக்கு இந்த புத்தகத்தில் குறை என தோன்றியது - கருத்துக்கள் கோர்க்கப்பட்ட விதம்.
இந்நூலை இன்னும் சற்றே சுருக்கமாக எழுதி இருக்கலாமோ என்று தோன்றியது. சில கருத்துக்கள் மறுபடியும் வருவதும், கருத்து தாவல்களும், வேகத்தடைகளாக இருந்தன.