வேற லெவல் எழுத்தாளர் கவுதம் கருணாநிதி அவர்களின் புதிய ஹாரர் த்ரில்லர். படித்தவர்கள் நிச்சயம் வேற லெவல் என்று கொண்டாடி மகிழ்வர். ஏற்கனவே எழுத்தாளரின் பல கதைகளில் உங்கள் மனம் கவர்ந்த விஷால் அசத்தியிருக்கும் வேற லெவலை படித்து மகிழுங்கள். நாவலிலிருந்து "என்ன முனியா ஆச்சு?" "அய்யா செத்துப் போயிட்டா" "சரி பின்னாடி தோட்டத்தில் கொண்டு போய் குழிதோண்டி புதைச்சிடு" "சரிங்கய்யா" அவன் சொன்ன அந்த நொடியில் வெளியில் இருந்த ஒரு வெளிச்சப் புள்ளி எவருமறியாமல் ஜன்னல் வழியாக நுழைந்தது. இறந்து கிடந்தவளின் மேல் வெளிச்சம் பட்டது. குழிக்குக் கொண்டு போவதற்காக முனியன் அவளைத் தூக்க முயல அவள் சட்டென்று எழுந்தாள்.