பாரடைஸ் லாஸ்ட்" (Paradise Lost) என்பது 17-ஆம் நூற்றாண்டின் ஆங்கிலேயக் கவிஞரான ஜான் மில்டன் (1608-1674) எழுதிய காவியம் ஆகும். 1667ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் பதிப்பு, பத்து ஆயிரம் வரிகள் கொண்ட பத்து புத்தகங்களைக் கொண்டிருந்தது.இழந்த சொர்க்கம் என்பது ஆதாம் ஏவாள் பற்றிய கதை. இருவரும் ஈடன் தோட்டத்தில் எப்படி படைக்க பட்டார்கள் ஏன் வெளியேற்றப்பட்டார்கள் என்பதை கூறுகிறது. மேலும் சாத்தான் இக்கதையின் முக்கிய கதாபாத்திரமாக திகழ்கிறது. சாத்தான் ஒருமுறை கடவுளுக்கு எதிராக செயல்பட்டது அதனால் சொர்க்கத்தில் இருந்து நரகத்திற்கு அனுப்பப்பட்டது. சாத்தான் கடவுளை பழிவாங்க நினைத்தது. தனது உண்மையான உருவத்தில் இருவரையும் சந்திக்க இயலாமையால் பாம்பு உருவம் எடுத்து சந்திக்கிறது.