பிரபல ஈழத்தமிழ் எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்கள் எழுதிய அங்கே இப்ப என்ன நேரம் ஒரு கட்டுரை தொகுப்பு.
இவர் வசித்த நாடுகள், வாசித்த இலக்கியங்கள், சந்தித்த மணிதர்கள், ரசித்த கலைகள் ,செய்த பயணங்கள் , குடும்பம், வேலை என்று இவரது அனுபவங்களை மிகவும் ரசிக்கும்படி எழுதி இருக்கிறார்.
பல எழுத்தாளர்கள் இது போன்று நூல் எழுதியிருந்தாலும் பொதுவாக அதில் ஒரு மேதமை தன்மை வெளிப்படும் ஆனால் நமது நெருங்கிய நண்பன் தனது எளிய அனுபவங்களை பகிர்ந்து கொள்வதைப்போல இருக்கிறது இவரது எழுத்து, அதற்கு காரணம் இவரது எழுத்தில் ததும்பும் நகைச்சுவை. சின்ன புன்னகையை உதிர்க்காமல் நம்மால் பக்கங்களை கடக்க இயலாது என்பது நிச்சயம்.
ஒரு மனிதருக்கு இவ்வளவு அனுபவங்களா என்று வியப்பு ஏற்படுகிறது அதிலும் இவரது பணி அனுபவங்கள் கனடாவில் தொடங்கி சூடான்,பெஷாவர் , சோமாலியா என்று நீள்கிறது.
ஒரு பக்கம் கூட சலிப்பு ஏற்படாமல் தொடர்ந்து படிக்க தூண்டிய புத்தகமாக இருந்தது.