நாடக உலகின் சக்கரவரத்தி எம்.ஆர்.ராதாகலைஞனின் கலைஞன் என்று சொல்வதை விட பகுத்தறிவு கலைஞன் என்று சொல்வதே பொருத்தமாய் இருக்கும். நாடக உலகின் சூப்பர் ஸ்டார், தன்னம்பிக்கை நிரம்பிய தனிப்பெரும் கலைஞன், பகுத்தறிவு கருத்துக்களின் பிரச்சார பீரங்கி, யாருக்கும் அடங்காத பிள்ளை, அரசியலில் கலகக்காரர் இப்படி பல பெயர்களுக்கு சொந்தக்காரர்.அவர் என்றும் யாருக்கும் பயந்ததில்லை, யாரும் முன்னாடியும் போய் எதற்காகவும் போய் நின்றதும் இல்லை அவர் பயப்பட்டத்து தன் மனசாட்சிக்கு மட்டும் தான். தன் மனதிற்க்கு ஒரு விசயம் சரியென்று பட்டால் அதை உடனே செய்து விடுவார் தவறு என்று பட்டால் எதிரே யார் இருப்பது என்று கூட பார்க்கமாட்டார் வெளுத்து வாங்கிவிடுவார்.எம்.ஜி.
சிறைச்சாலை சிந்தனை என்பதை விட சுயதம்பட்ட சிந்தனை எனலாம்... தன் வரலாறு எனினும் சில நிகழ்வுகளை வெளிப்பாடையாகவே ஒப்புக் கொண்டவரால் ஏன் சிறைச்சாலைக்கு சென்றோம் என்பதை மெழுகிப் பூசி ஒரு அக்மார்க் கழக சிந்தனையாளராகவே மாறி இருக்கிறார்.
குடி, பெண்பித்து, ஆண் மோகம், குண்டாயிசம், கொலைகாரன், திருடன், ரவுடி என்ற கழகத்திற்கே உரிய அடையாளத்தோடு வெளிப்படுத்தியிருப்பதில் என்ன பெருமை இருக்க முடியும். அக்கால கட்டமும் இக்காலமும் அரசு நிர்வாகம் எப்படி இந்த குண்டர்களுக்காக இருந்திருக்கிறது என்பது கண்கூடு.
This entire review has been hidden because of spoilers.