ஆசிரியர் கிருஷ்ணமணி அவர்கள் வடாற்காடு மாவட்டம் சோளிங்கபுரத்தில் 1935ம் ஆண்டு ஆகஸ்டு 9ம் தேதி பிறந்தார். தாய் சம்பூர்ணம். தந்தை மோசூர் கிருஷ்ணசாமி சாஸ்திரி. வழக்கறிஞர்.
1952ம் ஆண்டு முதல் எழுதி வருகிறார். திரு.ராம கோபாலன் (இந்து முன்னணி தலைவர் /அமைப்பாளர் ) பதிப்பித்து வந்த தியாக பூமியில் சரித்திர சிறுகதைகள், கட்டுரைகள் இடம் பெற்றன. நாடகத்துறையில் ஈடுபாடு. 1956 முதல் மேடை நாடகங்களில் நடிகனாக பங்கேற்பு. உலக நாடக இலக்கியங்களைப் படித்து அதுவே போன்று தமிழிலும் எழுத ஆர்வம்.
1962ல் முதல் நாடகம் சமர்ப்பணம்.தொடர்ந்து மேடை நாடகங்கள் எழுதி,தயாரித்தார். 1969ல் உலக நாடக இலக்கியம் ஆய்வு நூல் வெளியிடப்படுகிறது.1970ல் ஸேவா ஸ்டேஜ் S.V.சஹஸ்ர நாமத்துக்கு 'சத்திய தரிசனம