அ.மார்க்ஸ் தமிழகத்தின் முன்னணி அரசியல், கலாச்சார செயற்பாட்டாளர். நமது காலத்தின் ஒவ்வொரு பிரச்சனையின் மீதும் தனித்துவமான, அழமான பார்வைகளை வெளிப்படுத்துபவை அவரது எழுத்துக்கள். அதிகாரத்திற்கு எதிராக அச்சமின்றி குரலெழுப்புபவை அவை. பண்பாட்டுத் தளங்களில் புதைந்திருக்கும் நுண்ணரசியலை வெளிச்சமிட்டுக் காட்டுபவை. கலை, இலக்கியங்களை சமரசமின்றி மறுமதிப்பீடு செய்பவை. பொதுப்புத்தியில் உறைந்துள்ள தப்பெண்ணங்களை அ.மார்க்ஸ், தன் எழுத்துக்களின் வழியே தொடர்ந்து கலைத்துச் செல்கிறார். அவர் தீராநதி இதழில் நான்காண்டுக்கும் மேலாக எழுதிய பத்தியின் இப்பெருந்தொகுப்பு நம் சமகால அரசியல், சமூக வாழ்வின் மாபெரும் ஆவணம்.
அ. மார்க்ஸ் தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளரும், இயற்பியல் பேராசிரியரும் ஆவார். மனித உரிமைப் பணிகளுக்காக களப்பணி ஆற்றி வருபவர். இலக்கியம், சமயம், அரச நிறுவனம், தேசியம் என ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் உள்ள அரசியலை தனது எழுத்துகளின் மூலம் தொடர்ந்து கவனப்படுத்தி வருபவர்.