"ஹிம்சாகரின் கோயம்புத்தூர்க்காரி" - தரமான "அக்மார்க் ஒரிஜினல் சம்பவம்" என்று சொன்ன பிறகு, கற்பனையான கதைக்கான மசாலா, கதையமைப்பு, ட்விஸ்ட் போன்றவற்றை எதிர்பார்ப்பது அபத்தமே ஆனாலும், அதைத்தான் செய்வீர்களென்று எனக்கு புரியாமலில்லை. But I am Sorry.! அப்படியானால் தாராளமாய் வேறு நல்ல கதையம்சம் உள்ள நாவல் வாசித்துக்கொள்ளவும். விஷயம் இவ்வளவுதான். பன்னிரண்டு வருடத்திற்கு முந்தைய அனுபவத்தை "டெல்லி நாஸ்டால்ஜியா" என்று சுருக்கமாய் எழுத நினைத்து கைவைத்தால், அது நீண்டு "ஹிம்சாகரின் கோயம்புத்தூர்க்காரி"-யாய் நிற்கிறது. என்னளவில் என் மனதோடு ஒன்றி இத்தனை வருடம் சுமந்த ஒன்றை முடிந்தவரை அப்படியே சொல்ல முயற்சித்திருக்கிறேன். "எழுத்தாளன்" என்பதெல்லாம் ஒரு பெரிய தி