!!தாத்தாக்கள் எல்லாம் தேவதைகள் தான்!! கிராமங்களில் அதிகம் சந்தித்திடாத ஒரு தாத்தாவின் கதை. கருத்துப் போன தேகம், முன் நெற்றியில் மயிர் இழந்த தலை, சட்டை இல்லாமல் துண்டை மட்டும் தாங்கி நிற்கும் அகன்ற தோள்கள், முறுக்கேறிய கால்கள், சேற்றுக் கரை படிந்த கைலி, மண் வெட்டி பிடித்து காப்பு காய்ச்சி போன கைகளில், “நிலமெல்லாம் இரத்தம்" புத்தகம். புத்தகத்தின் ஒவ்வொரு வரிகளாய் கவனமாய் ஓடிக் கொண்டு இருக்கும் விழிகள். ஆளின் உருவத்திற்கு, அழுக்கு கைலிக்கும் கையில் இருக்கும் புத்தகம் வினோதமாய் இருக்கலாம். அந்த வினோதம் தான் தவசி முத்து. ஊர், திருநெல்வேலி மாவட்டம், இல்லை இப்போது தென்காசி மாவட்டத்தில் இருக்கும் காளத்தி மடம் என்ற கிராமம்.