Tiruchirapalli Srinivasan Rangarajan, (Tamil: திருச்சிராப்பள்ளி ஶ்ரீனிவாசன் ரங்கராஜன்) professionally credited by his pseudonym Vaali (Tamil: வாலி) was an Indian poet who has the record for writing the most songs in Tamil cinema. He is also recognised for a five-decade long association in the Tamil film industry and has written over 15,000 songs. He acted in a number of films, including Sathya, Hey Ram, Paarthale Paravasam and Poikkal Kudhirai. He was honoured by the Government of India with the Padma Shri, India's fourth highest civilian honour in 2007.
புத்தங்கங்களுக்கு அடுத்த படியாக திரைப்படங்களை விரும்பும் நான் திரைக்கதைகள் புத்தக வடிவில் வாசிக்க கிடைக்கும் என்பது கேள்வி பட்டிருக்கிறேன். அப்படி தேடியதில் கடந்த வருடம் சென்னை புத்தக கணக்காட்சியில் வாங்கினது தான் இந்த புத்தகம். வாலி என்றுமே எனக்கு பிரியமான ஒரு பாடலாசிரியர். அதற்காகவே இதை தேர்ந்தெடுத்தேன். இப்போது தான் வாசிக்க நேர்ந்தேன். சாம்பு, மனைவி காயத்ரி மற்றும் மகன் நவநீதகிருஷ்ணன் என்ற மிகவும் ஏழ்மையான குடும்பம். அப்பா, மகன் இருவரும் ஒரு ஹோட்டலில் சம்பளத்திற்கு வேலை பார்க்கிறார்கள். காயத்ரி இல்லத்தரசி; கண்ணன் மீது மிகுந்த பக்தி கொண்டிருப்பவள். அவள் பக்தியையும் கடவுளையும் சாம்பு அடிக்கடி கிண்டல் செய்து வருகிறார். காயத்திரி காணிக்கையாக சேர்த்து வைத்த சொற்ப காசை சாம்பு ஒரு நாள் அவரசரத்திற்கு எடுக்க அதனை பற்றி கேக்க கண்ணன் அவர் முன் தோன்றுகிறார். அவர்களிடையே நடக்கும் சம்பாஷணைகளும் அதன் பிறகு சாம்புவின் வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நேர்கிறது என்று நகைச்சுவையாக சொல்லும் புத்தகமே இந்த 'கலியுகக் கண்ணன்'. வாலி என்ற கவிஞனை பற்றி தனியாக சொல்ல தேவை இல்லை. அவரது மொழிஆளுமையை, கற்பனாசக்தியை நாம் ஏகப்பட்ட பாடல்களில் கேட்டு ரசித்திருக்கிறோம். ஆனால் அவர் படங்களுக்கு திரைக்கதை மற்றும் வசனங்கள் எழுதியது எனக்கு புதிய தகவல். இதில் வரும் வசனங்கள் அவர் ஒரு சிறந்த சிந்தனையாளர் என்று நம்மை உணர்த்துகிறது. கிருஷ்ணருக்கும் சாம்புவுக்கும் இடையேயான சம்பாஷணை இதற்க்கு சிறந்த எடுத்துக்காட்டு. இந்த காலகட்டத்தில் கூட வசனங்கள் அதன் முக்கியத்துவத்தை இழக்கவில்லை. கணவன் மனைவி, மாமியார் மருமகள் என்ற பந்தங்களைப் பற்றி சொல்கிறபோதும் நேர்த்தி. ஒரு காட்சியில் பாத்திரங்கள் வெறும் திரைப்பட பெயர்களை மட்டும் பயன்படுத்தி பேசியிருப்பார்கள். அந்த இடத்தில் அவர் நகைச்சுவை உணர்வு மற்றும் சொல்லாற்றலை தெளிவாக காணலாம். கதாபாத்திரங்கள் கையளவு என்றாலும் இதனை படித்த பிறகு திரைப்பட வடிவத்தையும் பார்க்க நேர்ந்தேன். ஒரு நல்ல திரைக்கதை இருந்தால் கண்டிப்பாக அந்த படம் நன்றாக அமையும் என்பதற்கான ஒரு நல்ல எடுத்துக்காட்டு. மிகவும் வேகமாக வாசிக்க முடிந்தஒரு புத்தகம். பணத்தின் மேல் கொள்ளும் பேராசை ஒரு மனிதனின் வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் கொண்டுவரும் என்று நகைச்சுவையாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு புத்தகம்.
I loved the conversational flow of the book and resonated with several parts. A few sections felt old-fashioned, particularly the belief that the husband is everything, but despite that, it’s a good book.