நடுங்கும் கைவிரல்களால் ஸ்வெட்டர் பின்னும் மூதாட்டியின் கரங்களைப் போன்றது பிரான்சிஸின் கவிதை உலகம். அது பதற்றமுறுகிறது. பதற்றமுறாதவன் எப்படி கவிதை எழுத முடியும்? பதற்றமே இன்றைய நம் வாழ்வின் சாரம். சம்மனசுக்காடு ஒரு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவரும் பிரான்சிஸின் கவிதைத்தொகுப்பு நூலாகும்.
ஜெ. பிரான்சிஸ் கிருபா ஒரு தமிழ் நவீன கவிதை எழுத்தாளர். இவர் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், மூன்றடைப்பு, பத்தினிப்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர். பள்ளிப்படிப்பே பயின்றுள்ளார்.
இவர் கவிதை, புதினம் எழுதியுள்ளார். மல்லிகைக்கிழமைகள், ஏழுவால் நட்சத்திரம் எனும் கவிதை நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய கன்னி எனும் புதினம் 2007 ஆம் ஆண்டில் ஆனந்த விகடனின் சிறந்த புதினம் எனும் வகைப்பாட்டில் விருது பெற்றுள்ளது. 2008 ஆம் ஆண்டுக்கான நெய்தல் இலக்கிய அமைப்பின் சுந்தர ராமசாமி விருது பெற்றவர்.
படைப்புகள்
புதினம் கன்னி
கவிதை தொகுப்புகள் மல்லிகைக் கிழமைகள் சம்மனசுக் காடு ஏழுவால் நட்சத்திரம் நிழலன்றி ஏதுமற்றவன் மெசியாவின் காயங்கள் வலியோடு முறியும் மின்னல்.
விருதுகள் சுந்தரராமசாமி விருது - கவிதைக்கான விருது (2008) சுஜாதா விருது - சம்மனசுக்காடு (2017) மீரா விருது ஆனந்த விகடன் விருது