மகேஷின் மனைவி சக்தி. ஆனால் பிரிந்து போனாள். அவனுக்கும் தனக்கும் பிறந்த மகனை பற்றி அவனிடம் சொல்லவே இல்லை அவள். காதலித்து மணந்த மனைவியை பிரிந்து வாழ்வதே ரணம் அவனுக்கு. அவள் தன்னிடம் மறைத்து வந்த விசயம் தெரிந்தால் என்ன செய்வான்.?சக்தி மகேஷை மனதார விரும்பினாள். தன் உயிரையும் அவனுக்காக இழப்பாள். ஆனால் எதற்காகவும் அவனை இழக்க விரும்பவில்லை.காதலை மனதில் மறைத்து வைத்தாள். அவளின் காதலை பெற தன்னால் முடிந்த அத்தனை சேட்டைகளையும் செய்துக் கொண்டிருந்தான் அவன்.