திரு.கிசாரி மோகன் கங்குலியால் 1883 முதல் 1896 வரை மொழிபெயர்க்கப்பட்ட "The Mahabharata" ஆங்கில நூலின் தமிழாக்கம்... முழு மஹாபாரதம்...
This is a Tamil translation of Mr.Kisari Mohan Ganguly's "The Mahabharata", which was translated to english from sanskrit between 1883 and 1896.
7-ம் புத்தகம் - துரோண பர்வம் | 7th Book - Drona Parva
மொழிபெயர்ப்பு: செ.அருட்செல்வப்பேரரசன் | Translated S. Arul Selva Perarasan
இது வீரத்தலைவர்களும், இளவரசர்களும் மரணமடைந்ததைச் சொல்லும் மஹாபாரதத்தின் ஏழாவது பர்வமான துரோண பர்வமாகும்.(266) இதில் மொத்தம் நூற்று எழுபது பகுதிகள் இருக்கின்றன.[9] மேலும் பராசரர் மகனும், அதிகத் தியானத்திற்குப் பிறகு உண்மை ஞானத்தை அடைந்தவருமான வியாசமுனிவரால் தொகுக்கப்பட்ட இந்தத் துரோண பர்வத்தில் எட்டாயிரத்து தொள்ளாயிரத்து ஒன்பது பாடல்கள் இருக்கின்றன.(267,268)
[9] கங்குலியில் துரோண பர்வத்தில் 203 பகுதிகள் இருக்கின்றன.