பளபளப்பாகத் தெரியும் பலரது வாழ்க்கை, உள்ளே நுழைந்து பார்க்கையில் அத்தனை அழகாய் இருப்பதில்லை. எந்த நேரமும் முள் படுக்கையில் கிடக்கும் சில மனிதர்களையும்… அடுத்த மனிதரை எப்போது வேண்டுமானாலும் புசித்துக்கொள்ளலாம் என்ற தந்திரத்தோடு திரியும் சில மனிதர்களையும்….. தனிமையின் தீராப் பெருந்துயரத்தினையும், பேசப்படாத வார்த்தைகளைச் சுமந்தபடியே திரியும் சில மனிதர்களையும்….. சொல்லத் தெரியாத மெல்லிய அன்பினை ஏந்தித் திரியும் சில மனிதர்களையும்… இன்னும் இன்னுமாக வடிவமைக்கப்பட்ட மனிதர்களையும் கடந்து வந்திருக்கின்றேன். அப்படியாய் நான் பார்த்த சில மனிதர்களுடைய உணர்வுகளின் தொகுப்புத்தான் இந்தக் கதை.
Very interesting story. Good Narration. The author takes us into the story through the characters. Thanks and appreciation to the author for providing the wonderful story.