இந்து தமிழ் நாளிதழில் வெளியான தமிழ் சினிமா குறித்த கட்டுரைகளின் தொகுப்பு. இந்த நூல் அலிபாபாவும் நாற்பது திருடர்களும், கப்பல் ஒட்டிய தமிழன், உதிரிப்பூக்கள், பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும், அவள் அப்படித்தான், வீடு போன்ற படங்கள் குறித்த கட்டுரைகள் குறிப்பிடத்தக்கவை
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
Book 33 of 2021 புத்தகம் : வெண்ணிற நினைவுகள் எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 146 நூலங்காடி : @desanthiripathippagam
எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள் தான் பார்த்திப சிறந்த தமிழ் திரைப்படங்களைக் குறித்தும் , அவரின் பார்வை மற்றும் திரைப்படம் பார்த்த அனுபவங்களையும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம்.
💥 முன்னுரையில் எஸ்.ரா அவர்கள், படத்தில் இருக்கும் குறிப்பிட்ட பாடலுக்காக, குறிப்பிட்ட காட்சிக்காக, அந்த படத்தை முன்று அல்லது நான்கு முறை பார்த்த அனுபவங்களை பகிர்ந்திருந்தார். இன்று ஏனோ , ஒரு திரைப்படத்தை ஒரு தடவை கூட பார்க்க முடியவில்லை.
💥 திரைப்படம் என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கிற்காக இல்லாமல் , அரசியல் , நடுத்தர மக்களின் வாழ்வியல் குறித்து பேச ஒரு கருவியாக இருந்தது.
💥 பெண் என்றால் ஆண்களின் தேவைகளையும் ஆசைகளையும் சுற்றியே இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தூக்கி எறிந்த இயக்குனர்களில் முதன்மையானவர், இயக்குனர் மகேந்திரன் பழைய யுகத்துப் பெண்ணாக "உதிரிப்பூக்கள்" படத்தில் அஸ்வினி. நவீன யுகத்துப் பெண்ணாக "நெஞ்சத்தைக் கிள்ளாதே" படத்தில் சுஹாசினி.
💥 நடுத்தர மக்களின் பெரும் கனவாக இன்றும் இருப்பது , சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே.. அதை இயக்குனர் பாலுமகேந்திரா அவர்கள் தனது படைப்பான "வீடு" என்னும் படத்தில் சுதா மற்றும் சொக்கலிங்க பாகவதர் வாயிலாக அருமையாக காட்டியிருப்பார்.
💥 தண்ணீரின் முக்கியத்துவத்தை இந்தப் படத்தில் கூறியது போல வேற எந்த படத்திலும் காட்டவில்லை என்பதே உண்மை.... இயக்குனர் சிகரத்தின் "தண்ணீர் தண்ணீர்".
💥 கிராமங்களை தன் கேமிரா மூலம் காட்டிய ... இயக்குனர் இமயம்.
💫💫 ஒரு சில திரைப்படங்கள் மறுபடியும் பார்க்க தூண்டும்.. அந்த வரிசையில் நான் அதிக முறை பார்த்த திரைப்படங்கள்.... அவள் ஒரு தொடர்கதை மனதில் உறுதி வேண்டும் கல்கி சம்சாரம் அது மின்சாரம் ஆயிரத்தில் ஒருவன் ( செல்வராகவன்) மௌன ராகம் தேவர் மகன்
தாங்கள் அதிக முறை பார்த்த திரைப்படம் என்ன என்பதை பதிவிடுங்கள்..
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி . Happy reading …..