மாயவரம் என்கிற மயிலாடுதுறை பழைய தஞ்சாவூர் ஜில்லாவில் காவிரிக் கரை மீது அமைந்துள்ள நகரம். சைவமும், தமிழும் வளர்ந்த நகரம். இந்த ஊரில்தான் முதல் தமிழ் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரம்‘ பிறந்தது. தமிழ்த் தாத்தா காலடிப்பட்ட மண். கல்கி வாழ்ந்த ஊர். காபியும், வெற்றிலை சீவலும் இவ்வூரில் கலாச்சார சின்னங்கள். இங்கு பிறந்து வளர்ந்த சந்தியா நடராஜன் தனது நினைவுகளிலிருந்து இந்த நகரத்தின் பண்பாட்டு வரலாற்றைப் பதிவு செய்துள்ளார்.