மார்க்ஸின் தத்துவத்தை- வாழ்க்கைப் பயணத்தின் அர்த்தத்தை- உலகின் கண்களுக்கு வரைந்து காட்ட முயன்ற சோவியத் சிதைக்கப்பட்டு, லெனினின் அசைவற்ற சிலை கிரேனில் பெயர்க்கப்பட்ட காட்சியை நாக்கை நீட்டி வேட்டை நாயாய் பார்த்து மகிழ்ந்தவர்கள் அவர்கள். 'மார்க்ஸியம் செத்துப் போய்விட்டது' என்று பைத்தியக்காரர்களைப் போல மனிதர்கள் வசிக்காத அண்டார்டிகா பனிப்பாறைகளைக்கூட விடாமல் உலகின் மூலை முடுக்கெல்லாம் கிறுக்கி வைத்திருந்தவர்கள் அவர்கள்.பெர்லின் சுவர் இடிக்கப் பட்டபோது, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச முகாம்கள் சரிந்தபோது வானத்துக்கும் பூமிக்குமாக குதித்த வர்கள் அவர் கள். பிடுங்கி எறிந்துவிட்டோம் என்று வெறி கொண்டு நர்த்தனம் ஆடியவர்கள் அவர்கள்.
பூர்வீகம் திருச்செந்தூர் அருகே செங்குழி என்னும் சிற்றூர்.
இதுவரை இராஜகுமாரன் (மீனாட்சி புத்தக நிலையம்) , போதிநிலா (வம்சி பதிப்பகம்)என்னும் இரு சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்திருக்கின்றன.
சேகுவேரா (சி.ஐ.ஏ குறிப்புகளின் பின்னணியில்), காந்தி புன்னகைக்கிறார், ஆதலினால் காதல் செய்வீர், மனிதர்கள் நாடுகள் உலகங்கள், என்றென்றும் மார்க்ஸ் என்னும் Non-fiction நூல்கள் பாரதி புத்தகாலயத்தால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
புத்தரைப் பார்த்தேன் என்னும் சொற்சித்திர தொகுப்பும், , உடைந்த முட்டையும் தலையெட்டிப் பார்த்த டைனசரும் என்னும் அரசியல் கட்டுரைகள் தொகுப்பும் அமேசானில் வெளியிடப்பட்டு இருக்கின்றன.
பள்ளம், இரவுகள் உடையும், இது வேறு இதிகாசம் ஆகிய மூன்று ஆவணப்படங்கள் இயக்கப்பட்டு இருக்கின்றன.
மண்குடம் என்னும் சிறுகதை இலக்கியச் சிந்தனை பரிசு பெற்றது.
இரவுகள் உடையும் ஆவணப்படம், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற ஜான் ஆபிரகாம் தேசீய விருதுக்கான திரைப்பட விழாவில் பங்கு பெற்றது.
காந்தியின் மரணத்தையும், அதற்கான ஆயத்தங்களையும் , அவரைக் கொலை செய்த செய்யக் காத்திருந்த கூட்டத்தைப் பற்றியும், அவரது கொலைக்குப் பிந்தைய காலத்தையும் சிறிதளவேனும் அலசும் புத்தகம். சிறிய புத்தகமானாலும் பல கருத்துகள் ஆழமாக யோசிக்க வைக்கக் கூடியவை. பல புதிய தகவல்களை அறிந்து கொண்டேன். இந்த புத்தகத்தைப் படித்த பின் ஹே ராம் திரைப்படத்தைப் பார்த்தேன். புத்தகத்தில் உள்ள எல்லா தரப்புகளையும் படத்தில் கொண்டு கொஞ்சமேனும் புனைவு கதை மெருகேற்றிய சிறந்த படமாகத் தெரிந்தது.