இமயமலையின் இதயப்பகுதி போன்ற மணாலி - லே ( லடாக் ) அட்வெஞ்சர் பயணம் குறித்த தொகுப்பு இது. மொத்தம் 13 நாட்கள் பயணம். சிம்லாவில் துவங்கி மணாலி, ஜிஸ்பா, சார்ச்சு, லே, பெங்காங் ஏரி, கர்துங் லா, கார்கில், ஸ்ரீநகர் என அபாயகரமான சாலை வழியாக பயணித்த அனுபவங்கள் வண்ணப் புகைப்படங்களுடன் விவரிக்கப்பட்டிருக்கின்றன. உயிருக்கு உத்தரவாதம் இல்லாத பயணம் இது. மலைகள், பள்ளத்தாக்குகள், அதி உயர கணவாய்கள் என இயற்கையின் உச்சக்கட்ட படைப்புகளின் வழியேயான பயணம் இது. சுற்றுலாப் பயணத்திற்கும், அட்வெஞ்சர் சுற்றுலாப் பயணத்திற்குமான வேறுபாடு என்னவென்றும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலைகள் வருடத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகிறது.