அவன் மீண்டும் விசிலடித்து கூப்பிட,.... அவள் நிற்காமல் வேகமாக நடந்து கொண்டிருந்தால், வேகமாக வந்து அவளை வழி மறித்தவன்,…. ஏய்! என்ன கூப்பிட, கூப்பிட நிக்காம போயிட்டே இருக்க? என்ன ரொம்ப அழகா இருக்கோங்கற திமிறா? என்று கேட்டான். அவள் பதில் சொல்லாமல் போகவே…. நான் உன்கிட்ட தான் கேட்டுட்டு இருக்கேன்…. எனக்கு பதில் சொல்லுடி? என்று கேட்வனை. மெல்ல விழிகளை உயர்த்தி பார்த்தவள், இதுக்கான பதிலை உனக்கு நான் ஏற்கனவே சொல்லிட்டேன், என்று அழத்தமான பார்வையில் அவனுக்கு பதில் தந்தவள்… தன் முன் வழி மறித்து நின்றவனை, சுற்றிக் கொண்டு செல்ல முயன்றாள்…. ஒரு மாதகாலமாக அவள் பின்னால் வந்து கொண்டிருக்கிறான். அவளுக்கு பல வகையில் தன் காதலை புரிய வைக்க முயற்சிக்கிறான்.