ஒரு இணையதளம் நடத்திய நாவல் போட்டிக்காக நான் எழுதிய, அந்த போட்டியில் சிறப்பு பரிசை பெற்ற நாவல் உங்களின் வாசிப்புக்காக இதோ..!! கிராமத்தைச் சேர்ந்த வெகுளியான பேதைப் பெண் நம் கதையின் நாயகி.. தன் கல்லூரி படிப்பை முடித்து வாழ்வின் அடுத்த நிலையான திருமணத்திற்கு காத்து நிற்கும் பருவ மங்கையவள்.. எல்லா பெண்களையும் போல தன் திருமண வாழ்க்கையை பற்றி பலவிதமான கனவுகளும் கற்பனைகளும் சுமந்து நிற்பவள்..அவள் ஊர் எல்லையை கூட தாண்டியிராதவள் சந்தர்ப்ப சூழ்நிலையால், திருமணம் முடித்து நகரத்துக்கு தன் கணவனுடன் குடியேறுகிறாள்.. கூடவே இன்றைய நவீன பொழுதுபோக்கு ஊடகங்களுக்கும் பழக்கமாகிறாள்.. அதனால் அவள் வாழ்க்கை படகு பெரும் சுழலில் சிக்கி தடம் மாறுகிறது..