தன் அக்காவின் திருமண வாழ்வு செழிக்கவும் தன் தங்கையின் திருமணத்திற்காகவும் தன் நெஞ்சில் சுமந்த காதலை அவளிடம் சொல்லாமல் வேலைக்காக வெளிநாடு பயணப்படுகிறான் கதாநாயகன். நாயகனின் காதலை அறியாத நாயகியோ தன் படிப்பை முடித்தவுடன் தன் பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்திற்கு சரியென தலையாட்டுகிறாள். மணமேடை வரை சென்ற திருமணம் தடைபட அதனால் அவள் படும் துயரங்களும் மற்றவர்களின் பரிதாப கூற்றுக்களும் அவளின் வசந்தமான வாழ்வை பாலைவனமாக்குகிறது. நாயகன் அவளின் நிலையறிந்து தன் காதலை கூறி கரம் பிடிப்பானா? இல்லை அவனின் மௌனங்கள் மட்டுமே தொடருமா?.. என காண்போம். அழகான கிராமத்து காதல் கதை... வெகு இயல்பாக நகரும் ஒரு காதல் களத்துடன் மீண்டும் உங்களை சந்திக்க வந்துள்ளே