கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான யுகபாரதியின் முதல் கவிதைத் தொகுப்பு. தமிழக அரசின் சிறந்த நூல் பரிசையும் குறள்பீட விருதையும் பெற்ற நூல். நவீன கவிதையில் நாட்டார் வழங்குச் சொற்களைப் பயன்படுத்தி வெளிவந்த கவிதைநூல்களில் இது முக்கியமானது. இந்நூலில் இடம்பெற்ற வணக்கம் காம்ரேட் கவிதைமூலம் பரவலான கவனத்தை ஈர்த்த யுகபாரதி, இடதுசாரி குடும்பப் பின்னணியுடையவர். இந்நூல் வழியே யுகபாரதி பாடலாசிரியராகத் திரைத்துறைக்கு அறிமுகமானார். இன்று ஆயிரத்து ஐநூறு திரைப்பாடல்களுக்குமேல் எழுதியுள்ள யுகபாரதி, கணையாழி, படித்துறை,ராஜரிஷி ஆகிய பத்திரிகையில் பணியாற்றியுள்ளார்.
Writing is an art. I watched an interview of Yugabharathi and understood he started publishing since he was 12 or 13. Just that sentence made me read this, thoroughly enjoyed. And he keeps impressing.