எனது பள்ளிப் பருவத்திலே இருந்தே கவிதை எழுதும் ஆர்வம் எனக்கு இருந்தது. சந்திரனில் மனிதன் இறங்கியதை ஒட்டி ஆனந்த விகடன் நடத்திய கவிதை போட்டியில் கலந்து கொண்டு அனுப்பிய எனது 'அம்புலிப் பயணம் ' என்ற கவிதைக்கு ஆறுதல் பரிசாக ஆனந்த விகடனின் மாவட்டச் சிறப்பிதழ்கள் வாரா வாரம் வீட்டுக்கு வரப் பெற்றேன். அதைத் தொடர்ந்து கவிதை, சிறுகதை எழுதிக் கொண்டு வருகிறேன். பல ஆண்டுகளுக்கு பிறகு அறிமுக எழுத்தாளனாக கல்கி பத்திரிகையில் எனது முதல் சிறுகதை வெளியானது. எனது சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் கல்கி, குங்குமம், பாக்யா , ராணி, தேவி கணையாழி, பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. பகலும் இரவும் மாறி மாறி வருவது போல் மாறி மாறி வரும் வாழ்வின் இன்ப துன்ப உணர்ச்சிகளை பிரதிபலிக்Ĩ