முதலில் தங்கள் அறைக்கு சென்று, சூர்யா சில நாட்களுக்கு முன் கோபமாய் அவள் முகத்தில் வீசிய டைவர்ஸ் பேப்பர்களில் கையெழுத்திட்டாள்கையெழுத்திட்டபோது பெருகிய கண்ணீரை கட்டுப்படுத்தினாள்.தனது பொருட்கள் சிலவற்றை எடுத்து ஒரு பெட்டியில் வைத்தாள்மேஜை மீது இருந்த அவனது புகைப்படத்தை எடுத்தவள், அதற்கு மேல் கட்டுப்படுத்த இயலாமல், அதை மார்போடு அணைத்துக் கொண்டு அழுதாள்சற்று நேரம் அழுது ஓய்ந்தவள், அந்த புகைப்படத்தையும் தன் பொருட்களோடு வைத்தாள். அனிதாவின் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டாள்இரவு சாப்பிட்டது, அதுவும் அவன் வற்புறுத்தலில் சிறிது மட்டுமே சாப்பிட்டதால், உடலும் மனதோடு சோர்வுற்றிப்பதாய் உணர்ந்தாள் ஏதேனும் உண்டாலொழிய, தன்னால
- “அபூர்வ ராகம்” என்ற சஹானாவின் நாவல், பிரபல வார இதழான கண்மணி இதழ் நடத்திய நாவல் போட்டியில் வெற்றி பெற்று, ரூபாய் முப்பதாயிரம் பரிசுத் தொகை வென்றது. அதோடு, செப்டம்பர் 25, 2019 தேதியிட்ட கண்மணி இதழில் அந்த நாவல் வெளியானது
- 2018 செப்டம்பரில், Newstn.in என்ற இணைய இதழில், சஹானாவின் ஆசிரியர் தின சிறப்புக் கட்டுரை வெளியானது
- 2016ம் ஆண்டு மங்கையர் மலர் நடத்திய "ஜெய்ஸ்ரீ ராஜ் நினைவு சிறுகதைப் போட்டி"யில், சஹானாவின் "இரண்டாவது அத்தியாயம்" என்ற சிறுகதை பரிசு பெற்றது
- அதே ஆண்டு "தமிழ் வலைப்பதிவர் குழுமம்" நடத்திய சிறுகதை போட்டியில் சஹானாவின் சிறுகதை பரிசு பெற்றது
- 2013ம் வருடம், மார்ச் மாதம் தினகரன் நாளிதழின் இணைப்பு இதழான "வசந்தம்" இதழில், "இணையத்தில் கலக்கிய இலக்கிய பெண்கள்" என்ற கட்டுரையில், சஹானாவின் பெயரும் இடம் பெற்று இருந்தது
- 2011ல் "நேசம் பவுண்டேசன்” நடத்திய கேன்சர் விழிப்புணர்வு சிறுகதைப் போட்டியில் சஹானாவின் சிறுகதை முதல் பரிசு பெற்றது
- அது மட்டுமின்றி, சஹானாவின் சிறுகதைகள் பல "வல்லமை", "அதீதம்", "திண்ணை" போன்ற இணைய பத்திரிக்கைகளின் புத்தாண்டு / பொங்கல் / தீபாவளி சிறப்பிதழ்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன
- யூத் விகடன் இணைய இதழில், சஹானாவின் கவிதைகள் சில வெளியாகியுள்ளன
- இரண்டரை லட்சத்திற்கு மேல் ஹிட்கள் பெற்றுள்ள சஹானாவின் “அப்பாவி தங்கமணி” என்ற பெயர் கொண்ட எனது வலைப்பூவில் (BLOG - not available to public view now), சஹானா எழுதிய தொடர்கதைகள், சிறுகதைகள், கவிதைகள், நகைச்சுவை பதிவுகள், கட்டுரைகள் என 200க்கும் மேற்பட்ட பதிவுகள், பலரால் தொடர்ந்து விரும்பி வாசிக்கப்பட்டு, சஹானாவிற்கென ஒரு வாசகர் வட்டத்தையும், எழுத்துலக நட்புகளையும் பெற்றுத் தந்தது