Jump to ratings and reviews
Rate this book

அமுல் : ஓர் அதிசய வெற்றிக் கதை: இந்திய வெண்மைப் புரட்சியின் வரலாறு

Rate this book
இந்திய மக்களின் நாவோடும் இதயத்தோடும் கலந்துவிட்ட ஒரு பெயர் அமுல். பால், வெண்ணெயில் தொடங்கிச் சாக்லெட், ஐஸ்க்ரீம்வரை அமுலை ருசிக்காதவர்களே கிடையாது.

அமுலின் தயாரிப்புகள் சுவையானவைதான்; அதே நேரம், அந்தப் பெயருக்குப் பின்னாலிருக்கும் அதிசயமான சமூக வரலாறு இன்னும் சுவையானது. மக்களால், மக்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த நிறுவனம் தன்னலமில்லாத, முனைப்பும் உழைப்பும் மிகுந்த தலைவர்களுடைய வழிகாட்டுதலால் வளர்ந்தது, லட்சக்கணக்கான கிராமவாசிகள், எளிய மனிதர்களுடைய வாழ்க்கையை மாற்றியமைக்கிற, ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழிகாட்டுகிற நிறுவனமாகச் சிறந்து விளங்குகிறது.

இந்திய வெண்மைப் புரட்சியைத் தொடங்கிவைத்த அமுலின் வெற்றிக் கதையைச் சுவையான மொழியில் விவரிக்கிறார் என். சொக்கன். ஒரு நாவலைப்போல் விரியும் இந்தப் பரபரப்பான கதை, கூட்டுறவுச் சிந்தனையின் வெற்றிக்கு உண்மைச் சான்று, இந்தியர்கள் ஒவ்வொருவரும், குறிப்பாக, இளைஞர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய வரலாறு.

199 pages, Kindle Edition

Published July 1, 2020

5 people are currently reading
6 people want to read

About the author

என். சொக்கன்

104 books53 followers
என். சொக்கன் என்ற பெயரில் எழுதும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் தெளிவான எழுத்தும் ஆழமான ஆய்வும் நிறைந்த தன்னுடைய நூல்களுக்காகத் தமிழகமெங்கும் நன்கு அறியப்பட்டுள்ளவர். புனைவு, வாழ்க்கை வரலாறு, நிறுவன வரலாறு, தன்னம்பிக்கை, சிறுவர் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்கள், நூற்றுக்கணக்கான கதைகள், கட்டுரைகளை எழுதியுள்ளார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (69%)
4 stars
6 (26%)
3 stars
1 (4%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 - 4 of 4 reviews
Profile Image for Canute Aravintharaj Denicius .
23 reviews5 followers
January 27, 2024
அமுல் இன் வெற்றிக்கதை

கூட்டுறவுத் துறை பற்றி மாத்திரமல்ல, விடாமுயற்சி மற்றும் கடும் உழைப்பும், நேர்மையும் இருந்தால் யாரும் வெற்றி பெறலாம் என்பதற்கான உதாரணம் அமுல்.

அருமையான புத்தகம், சுவாரசியமான எழுத்து நடை.
1 review
Read
May 31, 2021
Interesting book

I liked the narration of the book.
Very interesting from the beginning to the end. Enjoyed reading and expecting more from the author
Profile Image for Julian.
2 reviews
September 8, 2021
Good One

I was able to finish the book in one sitting, no lag and very motivational book to read. Well written!
Profile Image for Muthukumar.
22 reviews1 follower
May 11, 2022
Amazing Book. Must Read.

Inspirational Book. The amazing story of Amul and it's founders. Success story of massive cooperative society in India. Recommended Book.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.