கதைகள் மனதில் உள்ள இறுக்கங்களை குறைத்து படிப்பவர்களை வேறு ஒரு உலகத்திற்கு சிறிது நேரத்திற்கு எடுத்துச்செல்பவை. “ஜன்னல் ஜீன்ஸ்” - ஒரு நகைச்சுவை கதை. இன்றைய காலத்து யுவன்களும், யுவதிகளும், மற்றும் நவீன ஆடை அலங்காரங்களில் விருப்பம் உள்ள மற்றவர்களும், வித விதமான ஆடைகள் அணிவதை பார்த்து வியப்பில் பார்வையாளர்கள் உறைந்து போய் விடுகிறார்கள். இது அப்படிப்பட்ட ஒரு கதை. மிகவும் சிறிய கதை. நீங்கள் செலவழிக்கவேண்டியதோ ஆறு நிமிடங்கள் மட்டுமே. படித்து முடித்தவுடன் உங்கள் முகத்தில் புன்னகை கண்டிப்பாக விரியும் என்று என்னால் உறுதி கூற முடியும்.