"புரிதல்" உறவுகளின் அஸ்திவாரமாகவே பார்க்கப்படும் ஒன்று. தவறான புரிதல்கள் உண்டாக்கும் விரிசல்கள் ஏராளம். ஒருவரின் மீது அன்பை வைக்கும் போது, நம்பிக்கையையும் சேர்த்தே வைத்து விட வேண்டும். இல்லையெனில், மனம் உடைவது உறுதி. தவறான புரிதல்களில் பிரியும் நாயகன் நாயகியை கொண்ட கதை இது. மென்மையான காதல் கதை மட்டுமே. தவற விட்ட உறவு திரும்பக் கிடைத்ததா? என்பதே இதன் கரு.வாசகர்களுக்கும் இந்தக்கதையை எழுதி முடிக்க உறுதுணையாக இருந்த என் அன்பர்களுக்கும் நன்றி. வாசகர்கள் தங்களது கருத்துக்களை haninovels@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் என்னிடம் பகிர்ந்து கொள்ளலாம்.