திருக்குறளுக்கு பலர் உண்மையை உணராமல் உரை எழுதியுள்ளனர். இறைமையை உணர்ந்ததால், மூலத்தை திரிக்காமல் என் புரிதலுக்கு ஏற்ப எழுதியுள்ளேன். உணர்வுடன் இறைமையை அடையத்துடிப்பவர்களுக்கு இந்நூல் சமர்ப்பணம் புத்தகம் பெற : 9710230097
நீண்ட நாளாக திருக்குறளை முழுவதும் படிக்க வேண்டும் என நினைத்திருந்தேன். பரிமேலழகர், நாமக்கல் கவிஞர் ஆகியோரின் உரையை படிக்க முயற்சித்தேன். ஒரு முறை கூட திருவள்ளுவர் சொல்ல வருவதை புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், 1. உரையாசிரியர்கள் தம் கருத்தை புகுத்த நினைத்துள்ளனர் 2. திருவள்ளுவர் ஞானி (கடவுள் உணர்ந்த மனிதன்). அறிவு மற்றும் உணர்வு நிலையில் அவர் போல இருந்தால் தான் மூலம் முழுவதும் விளங்கும். திரு ஞானதேசிகன் சிவயோகி இறையுணர்ந்த குரு ஆதலால் அவரின் உரை கொண்டு 80% புரிந்து கொண்டேன். வள்ளுவம் காலத்தை கடந்த நூல். அதை ஒரு முறை படித்தால் விளங்கும் வண்ணம் இருக்காது. "தமிழனாக இருந்தால் இதை செய், அதை செய்" என்று மொழி பற்றை தூண்டும் பண்பற்றவன் நான் அல்ல. ஆனால் உலக பொது மறை என போற்றப்படும் நூலை முழுவதும் ரசிக்க இந்நூல் ஒரு சந்தர்ப்பமாக எனக்கு அமைந்ததால் நீங்களும் படித்து பாருங்கள். "கடவுள் இல்லை!" என கத்தும் மூடர்களும் இந்த அற்புதமான நூலுக்கு உரை செய்தது 'முட்டாள் தனத்தின் உச்சம்' என நீங்களும் இந்நூலை படித்தால் உங்களுக்கே புரியும்