புதிய புதிய தளங்களில் இயங்குவதும், பழைய அனுபவங்களை அதில் உட்படுத்திப் பார்ப்பதுமாக தனது வாசகப் பரப்பை விஸ்தரித்துக் கொண்டே இருப்பவர் சரவணன் சந்திரன். இந்தத் தொகுப்பும் கூட முற்றிலும் வேறு வேறு திசைகளுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் முக்கியமான கட்டுரைகளைக் கொண்டடங்கியது. கடல், நிலம், பயிர், கால்நடை, பறவைகள் வேளாண்மை, மருத்துவம், தொழில், வாழ்வு, அரசியல், விளையாட்டு, ஊடகம், வாழ்வியல், வானியல் என்று பல களங்களில் நின்று தன்னுடைய பிரத்தியேக அனுபவங்களைக் கலந்து கட்டி இறைத்திருக்கிறார். இவரது கட்டுரை மொழி வாசிக்கக் கையில் எடுத்தால் உங்களைக் கீழே வைக்க விடாது.