தம்பி ஜோஸ், புத்தகங்களைப் பற்றி எழுதும் பதிவுகளை மிகவும் விரும்பி ரசித்துப் படிப்பவன் நான். அப்படிப்பட்டவர் என் மனம் கவர்ந்த என் மனம் மட்டுமா? தமிழகத்தில், இல்லை இல்லை உலகிலுள்ள பெரும்பாலான தமிழர்களின் மனங்களை கவர்ந்த நம் தலைவர் கலைஞரின் நூலைச் சுருக்கி எழுதுகிறார் என்றால் இன்னும் சொல்ல வேண்டுமா, இந்த பதிவுகள் தொடராக முகநூலில் வந்த பொழுது ஆவலுடன் மிகவும் ரசித்துப் படித்தேன். இந்த அணிந்துரை எழுதுவதற்காக மொத்தமாக மூன்று பாகங்களையும் மீண்டும் இரு முறை படித்தேன். அது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். கலைஞரை ஒரு அரசியல் தலைவராகப் பார்க்காமல், ஒரு தனி மனிதராகப் பார்த்தாலும் எப்பேர்ப்பட்ட உழைப்பாளி எத்தனை திறமைகள் படைத்தவர் , பேச்சாளர், எழுத