காதலுக்கும் வஞ்சத்திற்கும் இடையே சிக்கித் தவிக்கும் நாயகன். பகடைக்காயாக நாயகி. அவனது கடந்த கால ரணங்களும் இழப்புகளும் ஏராளம்.அதற்கு வஞ்சம் தீர்த்து காதலையும் தக்க வைத்து கொள்ளும் அதிரடி நாயகனின் கதை.
பழிவாங்களுக்காக என்றாலும் அதை விடக் காதல் தூக்கலாகப் போனதால் இனிமையான முடிவு. மன்னிப்பு என்ற ஒற்றைச் சொல் கடந்த காலத் துன்பத்தை மறக்கடிப்பது போல அன்பு என்ற ஒற்றைச் சொல் கடந்த கால வன்மத்தை துடைத்தெறிகிறது.