"வேணி. . வேணி எந்திரி" என்று கூப்பிட அவளிடம் அசைவு இல்லை. குனிந்து தொட்டு அசைக்க போர்வைக்கு மேல் அவள் உடலின் சூடு தெரிந்தது. வேகமாக போர்வையை இழுத்து பார்க்க "ம்மா..." என்ற சன்னமான முனகலுடன் அசைந்தாள். உடல் நெருப்பாய் கொதிக்க பதட்டமாய் அவளை எழுப்பினான். "ம்ம்.." என்று அசைந்தாளே தவிர கண்ணை திறக்கவில்லை. போர்வையோடு அவளை இரண்டு கைகளிலும் தூக்கியவன் அவள் படுத்து இருந்த பாயை உருட்டி கட்டிலுக்கு அடியில் தள்ளி விட்டு மெத்தையில் படுக்க வைத்தான். வேகமாக சென்று அல்லியை கூப்பிட்டு விசயத்தை சொன்னவன் காரை எடுக்க கிளம்பினான். அல்லிக்கும் பதட்டம் தொற்றிக் கொண்டது. அறையில் சென்று வேணியை பார்க்க "மதனி மதனி என்னாச்சு?" என்று எழுப்ப "அல்லி ...