வறுமையின் காரணமாக, சிறு வயதிலேயே கரகாட்டக் கலைஞராக மாற்றப்பட்ட சிறுமியின் கதை. பிரச்சினை என்னவென்றால் அவளுக்குப் பள்ளிக்கூடம் போவதை விடவும் கரகாட்டம் ஆடுவதற்குப் பிடித்திருக்கிறது. குழந்தையை வேலைக்கு அனுப்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம் என்று பதபதைக்கும் முன்னாள் கரகாட்டக்கார அம்மா, எங்கே தன்னை ஆட வேண்டாம் என்று சொல்லி விடுவார்களோ என்று மலைக்கும் கெளசல்யா என்று உணர்ச்சிகள் மோதும் தருணத்தில் நிகழ்கிறது கட்டுரை. திரைப்படங்களுக்கும் நாட்டுப்புறக் கலைகளுக்குமான உறவை கருத்தியல் சார்ந்து உள்வாங்கிக் கொள்ளும் முயற்சி இது. திரைப்படம், கிராமியக் கலைகளை அழிக்கிறது என்ற அங்கலாய்ப்பிலிருந்து பாரதூரம் விலகி நின்று பிரச்சினையை அலசுகிறது.