இந்த கதை ஓர் இயல்பான குடும்ப கதை. எல்லோர் குடும்பத்திலும் நடக்கும் ஓர் இயல்பான அரசல்புரசல்களையே இந்த கதை மையமாக கொண்டு பேச போகிறது. ஆம். எல்லோர் குடும்பத்திலும் தவறாம இந்த மாதிரியான பிரச்சனைகளும் கோபங்களும் தாபங்களும் இருக்கவே செய்யும். அது எந்த மாதிரியான பிரச்சனை ? என்ன கோபம்? என்ன தாபம்னு கேட்டா அதுதாங்க கதையே! புதுசா எதையும் எழுத போறன்னு சீனெல்லாம் போட மாட்டேன். ஆனா சொன்ன விஷயமாகவே இருந்தாலும் அது நம்ம ஸ்டைல்ல வேற மாதிரி சொல்லுவேன். காதலும் நகைச்சுவையும் கலந்த மனதிற்கு இதமான கதை இது.