உலகத் திரைப்பட வரலாற்றில் மிகச் சிறந்த பத்து நடிகர்களில் ஒருவரான சார்லி சாப்ளினின் வேதனை நிறைந்த இளமைக் காலம்.. வெற்றி.. கண்ணீர் கலந்த புன்னகை எல்லாம் நிறைந்த வரலாறு.
Sir Charles Spencer "Charlie" Chaplin, KBE was an English comedian actor and film director. Chaplin became one of the most famous actors as well as a notable filmmaker, composer and musician in the early to mid Classical Hollywood era of American cinema. He was famous also for his great sense of humor and slapstick comedy skills.
சார்லி சாப்ளின் வாழ்க்கையை அவரே எழுதி இருக்கும் இந்த புத்தகம் மிக அருமையான புத்தகம். வெரும் தகவல்களாக இல்லாமல் அந்த தகவல்களின் பின்புலத்தில் உணர்த்தப்படும் வாழ்க்கை தரிசனம் மிக அற்புதமாக வந்திருக்கிறது. மிக மிக சாதரணமாக ஆர்ம்பிக்கறது இவரின் வாழ்க்கை எப்படியெனில் 5 ஷில்லாங் ஒரு வாரத்திற்கு மூன்றுபேர் சாப்பிட்டு உயிர்வாழ்கிறார்கள்.
சில இடங்கள் கண்டிப்பாக உள்ளத்தை தொடுபவை. சார்லியின் அம்மா தீடிரென்று பைத்தியம் ஆகிவிடுகிறாள் 10 வயதான சார்லி அவளை மருத்துவமனையில் விட்டுவிட்டு வீடு திரும்பும் காட்சியின் அதை தொடர்ந்து அவரின் வீட்டின் காட்சியும் மிகப்பெரும் படிமங்களாக மனதை பாதித்தது.
பாதி புத்தகம் வரை அவரின் வாழ்க்கைப்போராட்டம் பற்றி வருகிறது. லண்டனில் இருந்து எப்படியாவது வெளியே போடவேண்டும் என்று நினைக்கிறார். மீண்டும் மீண்டும் நம் ஊர் நமக்கு ஒரு விதமான சோர்வை அளிக்கவே செய்கின்றனபோலும்.
அமெரிக்க வாழ்க்கை இன்னும் உணர்வுபூர்வமாய் எழுதப்படவில்லையோ என தோன்றியது. அதனாலேயோ என்னமோ அந்த நாட்டைவிட்டு கடைசியில் வெளியேறிவிடுகிறார். மிகப்பெரும் அரசியல் காரணங்கள் இருந்தாலும் மிகவும் மென்மையாக எழுதியுள்ளாரோ என்று தோன்றியது.
நான் படித்த முதலாவது சுயசரிதை புத்தகம். எல்லா வெற்றியடைந்தவர்களை போலவே இவரும் சிறுவயதில் மிகவும் கஸ்டப்படுவதாக ஆரம்பிக்கின்றது புத்தகம் ஆனால் அந்த கஸ்டங்களை நீட்டாமல் வெற்றிப்பயணத்திற்குள் விரைவாக போகின்றார், நாடகத்துறை திரைத்துறை பாலியல் வாழ்க்கை அரசியல் நிலைப்பாடு என அனைத்தைப்பற்றியும் சுருக்குமாக வாசகர்கள் தன்னை புரிந்து கொள்ள தேவையான அளவு மட்டும் எழுதியிருக்கிறார், அமெரிக்காவினாலலும் ஊடகங்களாலும் கடைசி நேரத்தில் வெகுவாக தாக்கப்பட்டதையும் அந்த காலத்திலிருந்தே அமெரிக்க ஊடகங்கள் கொண்டிருக்கும் கடுமையான போக்கையும் விளங்கிகொள்ள கூடியயதாக இருக்கிறது. அரசியல் நிலைப்பாடு கொண்டவராக இருப்பதால் இறுதிப்பகுதி முழுவதும் அந்த நேரத்தது அரசியல் நிகழ்வுகளைப்பற்றி பேசுவதால் சுவாரஸ்யமாக முடிகிறது. கிட்டத்தட்ட நாவலுக்கான சுவாரஸ்யத்தோடு எழுதியிருக்கிறார்.