காமத்துப்பால் குறுங்கவிகள்! இரண்டாயிரம் ஆண்டுகளாகக் காதல் மாறவே இல்லை; காதலர்கள் மாறவில்லை. அதே சண்டை, அதே தாபம், அதே வெட்கம், அதே சில்மிஷம், அதே கள்ளத்தனம்; அதே பிரிவுத்துயர். எல்லாம் அப்படியே. பேசும் பாஷையும் பழகும் ஊடகமும் மட்டும் மாறிப் போயிருக்கிறது. செந்தமிழுக்குப் பதில் எளிய தமிழ்; பனையோலைக்குப் பதில் தொடுதிரை. அதற்கேற்ப குறள் வெண்பாவைக் குறுங்கவிதையாய் நவீனப்படுத்திப் பார்க்கிறது இத்தொகுதி. எக்காலத்துக்குமான இலக்கியத்துக்கு இக்காலத்தின் அரிதாரம் பூசிப் புன்னகைத்து ரசிக்கின்ற எத்தனம். வள்ளுவருக்கு ஜீன்ஸ், டிஷர்ட் மாட்டி நிற்க வைக்கும் முயற்சி. காமத்துப்பாலில் ஒரு கேப்பசீனோ!