Jump to ratings and reviews
Rate this book

ஆரஞ்சு முட்டாய்

Rate this book
கதை மாந்தர்கள் வெகு இயல்பாக உடன்பட்டும் முரண்பட்டும் சேர்ந்தும் விலகியும் நம்மோடு பயணிக்கிறார்கள். கிராமியத்தின் விழுமியங்களையும் வெள்ளந்தி மனிதர்கள் புழங்கிய சொல்லாடல்களையும் அவற்றின் நிமித்தப்பூர்வமான நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார். அவை இவரது கதைகளுக்கு அதிகதிக அழகைக் கூட்டுகின்றன. வரும் காலத்தில் தன்னை ஒரு முக்கியமான கதைசொல்லியாகத் தமிழ் மொழியில் நிலை நிறுத்திக் கொள்வதற்கான ஒட்டத்தில் முதல் சுற்றை முடித்துத் தொடர்கிறார் கார்த்திக் புகழேந்தி.

168 pages, Kindle Edition

Published January 29, 2020

12 people are currently reading
2 people want to read

About the author

Karthick is a well-known Tamil writer by his pen name Karthik Pugazhendhi, who has authored more than ten books, including three volumes of short stories. His works have been featured in other university curricula. Apart from this, he has written columns in many Tamil magazines. Works in the field of journalism. Trained as a Sub-Editor in Writer Ki.Rajanarayanan's KathaiSolli Magazine.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
10 (47%)
4 stars
7 (33%)
3 stars
1 (4%)
2 stars
1 (4%)
1 star
2 (9%)
Displaying 1 - 4 of 4 reviews
5 reviews1 follower
September 29, 2020
அருமை

மிக அருமையான புத்தகம் நானும் திருநெல்வேலி காரன் தான் அதனாலோ என்னவோ படிக்க படிக்க ஆர்வமாக இருந்துச்சு நல்ல படைப்பு இது போன்ற நல்ல படைப்புகள் வட்டார வழக்கு மொழி நடையில் எழுதுங்கள் நன்றி
57 reviews5 followers
June 1, 2025
ஆத்தாடி! என்ன சொல்ல ஏது சொல்ல! வாயடிச்சு நின்னுடோமில்ல. ஒரு அழகான இனிப்பு கடை. அதில நொழஞ்ச நமக்கு வித விதமான இனிப்புகள் பரிமாறப்படுது. ஒவ்வொன்னும் ஒரு சுவை. ஆனால் திங்க திங்க தெகட்டவே இல்ல. எல்லாத்தையும் அனுபவிச்ச நமக்கு அந்த இனிப்பு மாஸ்டர பாராட்டதறுக்கு வாய் வரல, ஏன்னா அப்பிடி ஒரு கிறுக்கம்.

அடேயப்பா, எத்தன திறம இந்த புள்ளைக்கு. தெரிஞ்சு தாந் புகழேந்தி ன்னு பேரு வெச்சாகளோ? அர்சுனன் மாதிரி ஆசானையும் மிஞ்சுவாபல எழுதியிருக்காரு. நவீன தமிழ் இலக்கியதில்ல ரொம்ப தொலவு போவ போறாறு.

கமலாலயன் ரொம்ப சரியா அழகா முன்னுரை எழுதியிருக்காரு - நவீனமும் மரபும் பயணிக்கும் ரயில்னு. படிப்பது எப்படி, எழுதுவது எப்படி னு நூறு புஸ்தகம் வந்தாச்சு. ஒரு வாசகியா என்னை ஓரொரு கதையிலும் கூடவே பயணம் செய்ய வெச்சு, மனச தொட்டு பேசி, சிரிக்க வெச்சு, அழுகாச்சியூட்டி- இந்த அனுபவம் எல்லா “எப்படி” யையும் தூக்கி போட்டு மிதிச்சிடுச்சு. அதுலயும் அந்த கடேசி கத ஒரு ஹைக்கூ க(வி) த.

தேன் சுவைய சொல்லி புரிய வைக்க முடியாது. எல்லாரும் சுவைச்சு அனுபவிக்கனும்.
Profile Image for Balaji Srinivasan.
148 reviews10 followers
November 3, 2024
அதிகமாக நெஞ்சை பிழியாமல் மனதிற்கு நெருக்கமாக இருக்கின்றன கதைகள்.

திரைப்படங்களில் வருவது போல் இல்லாமல் நடுத்தர மக்களின் எளிதான வாழ்கையை பிரதிபலிக்கிறது. இளவயது அனுபவங்களை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது போல.

குறிப்பாக ஆயிரம் ஜன்னல் வீடு, அம்பாசமுத்திரம் , தேனடை, வெயிலில் நனயாத கிராமம், சாயிபு நண்பன் மிகவும் அருமை.
19 reviews
September 27, 2025
நிச்சயம் பொருமையாக படிக்க வேண்டிய கதைகள், நன்கு அசை போடலாம்.

நிறைய இடத்தில் ழ ள இடம் மாறி உள்ளது.
Displaying 1 - 4 of 4 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.