சுளுந்தீ - முத்துநாகு
“கோவில்களில் வேண்டுதல் அதன் பூசாரிகளின் தொழிலைப் பொருத்து மாறும்”
இந்த ஆண்டு புத்தக கண்காட்சியில் டாப் 10 விற்பனையில் இடம் பெற்ற நாவல், மேலும் பலராலும் வெகுவாக பாராட்டப்பட்ட நாவல் என்ற காரணத்தால் மிகுந்த எதிர்பார்புடன் படித்தேன். கதை 18 ஆம் நூற்றாண்டில் நிகழ்கிறது. சரித்திர நிகழ்வென்றால் ராஜாக்களின் கதையாகவோ சிம்மாசன சண்டையாகவோ தான் இருக்கும். ஆனால் சுளுந்தீ எளிய மனிதர்களின் வாழ்க்கையை சித்தரிக்கிறது. அக்கால சூழலில் சமூகத்தில் நாவிதர்களின் நிலை என்ன, பண்டுவம் என்ற மரபான சித்த மருத்துவ முறை நாவிதர்களின் கூடுதல் பணியாக எப்படி வந்தது, மேலும் ராஜ சூழ்ச்சியால் தங்களின் நிலை எவ்வாறு வீழ்ந்தது என்பதை விரிவாக சித்திரப்படுத்தும் நாவல். இந்த நாவலில் மூன்று பிரதான கதாபாத்திரங்கள் வருகிறது.
1. சித்தர் - இவர் வழியாக அக்கால பண்டுவ முறைகள் பலவற்றை குறிப்புடன் விளக்கமாக கதைநெடுக தருகிறார்.
2. ராமன் - பிரதான கதாபாத்திரம், நாவிதரின் முக்கியத்துவத்தையும், அரண்மனையின் ரகசிய ஏவல்களை செய்து முடிக்க பணிக்படுவதையும், பண்டுவத்தை தனதாக்கி கொண்டதையும் தெளிவுபடுத்தும் கதாபாத்திரம்.
3. மாடன்- ராமனின் மகன், நாவிதராக இருப்பவன் படைவீரனாக மாற விரும்புவதால் அரண்மனைக்கு எதிரியாக நிறுத்தபடுகிறான்.
இவர்களை வைத்து பின்னப்பட்ட கதைதான் சுளுந்தீ... அடுக்கடுக்காக அறியப்படாத மருத்துவ குறிப்புகளை வழங்குவது சலிப்பை ஏற்படுத்துகிறது. மனதில் நிறுத்த முடியாத கதாபாத்திரங்கள் ஆங்காங்கே வந்து கொண்டே இருக்கிறது. ஒரு சில இடங்களில் வியப்பை ஏற்படுத்தும் எழுத்தாக இருந்த போதிலும், பெரும்பாலான இடங்களில் சலிப்பை ஏற்படுத்திய வாசிப்பு